Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
குருணாகல் ‘DIMO Mega Fiesta’ நிகழ்வில் 400 இற்கும் மேற்பட்ட Tata வணிக வாகனங்கள் இணைவு

Jul 30, 2026 - 01:36 PM

குருணாகல் ‘DIMO Mega Fiesta’ நிகழ்வில் 400 இற்கும் மேற்பட்ட Tata வணிக வாகனங்கள் இணைவு
Mobitel Inner 1278

பிராந்திய ரீதியிலான பிரம்மாண்ட வாடிக்கையாளர் ஈர்ப்புத் திட்டமான ‘DIMO Mega Fiesta Kurunegala 2026’ நிகழ்வு, குருணாகலில் அமைந்துள்ள DIMO கிளை வளாகத்தில் அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. வணிக வாகனங்களின் நீண்டகால செயற்றிறனை ஆதரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த 5 நாள் திட்டத்தில், குருணாகல் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 400 இற்கும் மேற்பட்ட Tata வணிக வாகன உரிமையாளர்களும் அவற்றை இயக்குபவர்களும் ஒன்றிணைந்திருந்தனர். 

இலங்கையின் முக்கிய வணிக மற்றும் விவசாய மையங்களில் ஒன்றான குருணாகல் நகரமானது, போக்குவரத்து, பொருட்கள் கையாளுகை, கட்டுமானம், விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள Tata வணிக வாகன வாடிக்கையாளர்களை அதிகளவில் கொண்டுள்ளதால் இந்நிகழ்வுக்கான இடமாக அது தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த பிரசாரமானது வாடிக்கையாளர்களுக்கு DIMO நிறுவனத்தின் விற்பனைக்குப் பிந்தைய நிபுணத்துவத்தை எளிதாகப் பெற்றுக்கொள்ள வழிவகுத்ததுடன், பிராந்திய ரீதியில் Tata வணிக வாகன சமூகத்துடனான உறவையும் பலப்படுத்தியது. 

இந்த பிரசாரம் குறித்து, DIMO நிறுவனத்தின் வாகன பொறியியல் தீர்வு பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், பெரும்பாலான வணிக வாகன உரிமையாளர்களுக்கு, அவர்களின் வாகனம் என்பது வெறுமனே போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல. அதுவே அவர்களின் வாழ்வாதாரமாகும். DIMO Mega Fiesta நிகழ்வானது நிபுணத்துவ தொழில்நுட்ப ஆலோசனை, அசல் உதிரிப்பாகங்கள், நிதித் தீர்வுகள் மற்றும் சுகாதார சுகவாழ்வு முயற்சிகளை வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் பெறும் வகையிலான ஒரு முழுமையான ஆதரவுத் தளத்தை வழங்க வடிவமைக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் தமது வாகன உரிமை தொடர்பான பயணம் முழுவதிலும் அவர்களுக்கு சரியான பங்காளியாக இருப்பதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. என்றார். 

இந்த பிரசாரத்தின் மூலம், Tata Motors நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் இலவச ‘bumper-to-bumper’ வாகனப் பரிசோதனைகள் மற்றும் விரிவான தொழில்நுட்ப அறிக்கைகள் வழங்கப்பட்டன. இது சாத்தியமான சிக்கல்களைக் கண்டறியவும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு குறித்து தொழில்முறை பரிந்துரைகளைப் பெறவும் வாடிக்கையாளர்களுக்கு உதவியது. அத்துடன், வாடிக்கையாளர்கள் இலவச எஞ்சின் ஒயில், பிரேக் ஓயில் மற்றும் கூலன்ட் டொப்-அப்களை பெற்றதோடு, அசல் Tata உதிரிப்பாகங்களுக்கு 50% வரையிலான விசேட தள்ளுபடிகளையும் பெற்றுக்கொண்டனர். இது வாகன செயல்திறனைப் பேணவும், எதிர்பாராத பழுதுபார்ப்புச் செலவுகளைக் குறைக்கவும் அவர்களுக்கு உதவியது. 

வாகனப் பரிசோதனைகளின் போது, எஞ்சின் தொடர்பான சிக்கல்கள், டீசல் பம்ப் தொடர்பான பழுதுபார்ப்புத் தேவைகள் மற்றும் வழக்கமான பராமரிப்புத் தேவைகள் ஆகியன கவனம் செலுத்த வேண்டிய பொதுவான விடயங்களாகக் கண்டறியப்பட்டன. நேரடி தொழில்நுட்ப ஆலோசனைகள் மூலம், வாகனத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்துதல், சரியான நேரத்தில் பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம், உற்பத்தித் திறன் மற்றும் சேவை ஆயுளை அதிகரிக்க அசல் Tata உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு இங்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. 

விற்பனைக்குப் பிந்தைய ஆதரவிற்கு அப்பால், ‘DIMO Mega Fiesta Kurunegala 2026’ நிகழ்வில் DIMO Retail, Tata பயணிகள் மற்றும் வணிக வாகனங்களின் கண்காட்சிகளுடன், வங்கிகள், லீசிங் நிறுவனங்கள், காப்புறுதி பங்காளர்களின் விசேட சலுகைகள் மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன், இந்நிகழ்வு 235 நபர்களுக்கு இலவசக் கண் பரிசோதனைத் திட்டம் மற்றும் மரக்கன்றுகள் விநியோகம் ஆகியவற்றின் மூலம் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வையும் முன்னெடுத்தது. இது வாடிக்கையாளர்களின் சுகவாழ்வு, சமூக ஈடுபாடு மற்றும் நிலைபேறான தன்மைக்கான DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியது. 

DIMO Mega Fiesta போன்ற திட்டங்கள் மூலம், DIMO நிறுவனம் நம்பிக்கையான போக்குவரத்துத் தீர்வுகள், விற்பனைக்குப் பிந்தைய நிபுணத்துவ சேவைகள் மற்றும் அர்த்தமுள்ள வாடிக்கையாளர் அனுபவங்களை இலங்கை முழுவதும் வழங்கி, தான் சேவை செய்யும் சமூகங்களின் கனவுகளுக்கும் இலட்சியங்களுக்கும் தொடர்ச்சியாக உத்வேகமளித்து வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

Mobitel 1278