Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
INSEE தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Sri Lankan Sustainability Awards 2026இல் உயர் விருதுகளை வென்றுள்ளது

Jul 30, 2026 - 04:01 PM

INSEE தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Sri Lankan Sustainability Awards 2026இல் உயர் விருதுகளை வென்றுள்ளது
Mobitel Inner 1278

இலங்கையின் ஒரேயொரு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளரும், சந்தையில் முன்னணியில் திகழும் நிறுவனமுமான INSEE Lanka, தனது முன்னணி வர்த்தகநாமங்களான INSEE Sanstha மற்றும் Mahaweli Marine Plus ஆகியவற்றுடன், Sri Lankan Sustainability Awards 2026 விழாவில் உயரிய விருதுகளை வென்றுள்ளது. 

14ஆவது World Construction Symposium உடன் இணைந்து Ceylon Institute of Builders (CIOB) ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் விழா, 2026 ஜூலை 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற CIOB Sustainability Awards 2025 விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்திருந்த INSEE, அதனைத் தொடர்ந்து இவ்வாண்டும் தனது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. 

2026ஆம் ஆண்டிலும், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக Sustainable Organization of the Year விருதை INSEE பெற்றுள்ளது. இவ்விருது, அதன் அனைத்து செயற்பாடுகளிலும் நிலைபேறான அபிவிருத்தி நடைமுறைகளை ஆழமாக ஒருங்கிணைத்துள்ளமைக்கு அங்கீகாரமாக அமைந்துள்ளது. அதேவேளை, நிறுவனத்தின் முன்னணி வர்த்தகநாமமான INSEE Sanstha Cement, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக Sustainable Cement Brand of the Year விருதைப் பெற்று, இலங்கையின் நம்பிக்கைக்குரியதும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பானதுமான சீமெந்து தீர்வாக தனது முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 

அத்துடன், புத்தாக்கத்தை மையமாகக் கொண்ட மேலும் இரு விருதுகளையும் INSEE வென்றுள்ளது. வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி செயல்திறனை மேம்படுத்தும் முன்னோடியான தீர்வாக, அதன் Mass Pouring Solution அங்கீகரிக்கப்பட்டு, Sustainable Technology Provider விருதும், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமான நடைமுறைகளை முன்னெடுத்து வரும் INSEE Micro Concrete இற்கு Sustainable Green Material Innovation விருதும் வழங்கப்பட்டது. 

இவ்விருதுகள், புதுமை, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பை மையமாகக் கொண்ட தனது அணுகுமுறையின் ஊடாக நிலைபேறான கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமாக INSEE தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியிருப்பதை வெளிப்படுத்துகின்றன. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த INSEE Lankaவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Eng. துசித் குணவர்ணசூரிய, ‘Building for Life’ என்ற எமது நோக்கத்தின் பிரதிபலிப்பாகவே இந்த விருதுகளை நாம் கருதுகின்றோம். எமது செயற்பாடுகள், புத்தாக்கங்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் மதிப்பை உருவாக்கும் முயற்சிகளின் அடித்தளமாக நிலைபேறாண்மை திகழ்கிறது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பல விருதுகளைப் பெறுவது, பொறுப்புணர்வுடனான செயல்பாடுகளையும் உயர்ந்த செயல்திறனையும் சமநிலைப்படுத்தியவாறு, புதிய தீர்வுகளை முன்னெடுத்துச் செல்லும் எமது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. என்றார். 

நிலைபேறான கட்டுமானத் துறையில் தொடர்ந்து புதிய அளவுகோல்களை உருவாக்கி வரும் INSEE, புதுமை, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் இலங்கையின் கட்டுமானச் சூழலுக்கான நீண்டகால மதிப்பு உருவாக்கத்தில் தனது அர்ப்பணிப்பை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

Mobitel 1278