Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
31 ஆவது சுமதி விருதுகள் வழங்கும் வைபவத்தில் SLT-MOBITEL PEOTV இன் சரண TV “சிறந்த கல்வி நிகழ்ச்சி” விருதை சுவீகரித்தது

Jul 30, 2026 - 04:06 PM

 31 ஆவது சுமதி விருதுகள் வழங்கும் வைபவத்தில் SLT-MOBITEL PEOTV இன் சரண TV “சிறந்த கல்வி நிகழ்ச்சி” விருதை சுவீகரித்தது
Mobitel Inner 1278

அண்மையில் நடைபெற்ற 31 ஆவது சுமதி விருது விழாவில், சிறந்த சமூக ஊடகத்திற்கான விருதைச் சரண TV சுவீகரித்துக் கொண்டது. அவ்விருதுகளில் சிறந்த கல்விச் சேவைகளுக்கான நிகழ்ச்சிக்கான விருதைச் சரண TV யில் ஒளிபரப்பான “சீதல ஈதல” (Seethala Eethala) நிகழ்ச்சி வென்றெடுத்தது. “சீதல ஈதல” நிகழ்ச்சி, தாலத்தின் வாலிபத்தை விளித்துரைக்கும், அவர்களின் சுயாதீனக் கருத்துக்களுக்கான தளமொன்றை அமைத்துக்கொடுக்கும் இலங்கையின் முன்னணி இளைஞர் உரையாடல் நிகழ்ச்சியாகும். 

இளைஞர் சமுதாயத்தினர் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக, மின்னணு ஊடகத் துறையில் சரண TV கணிசமானவொரு வெளியை ஒதுக்கியுள்ளது. சமூகக் கலந்துரையாடல்களுக்கான உரையாடலொன்றை ஆரம்பித்து வைப்பது மட்டுமன்றி, அவ்விளைஞர்கள் அதற்காகத் தமது சொந்த மற்றும் வெளிப்புற அனுபவங்களை உள்வாங்கி, அவ்வுரையாடலை வளம்படுத்துவது இதன் சிறப்பம்சமாகும். அதேபோன்று, அக்கூற்றுக்களுக்குத் துறைசார் நிபுணத்துவக் கருத்துக்களை வழங்குவதற்காக வருகை தரும் பாட நிபுணர்களும் இவ்வேலைத்திட்டத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். சமூகப் பிரச்சினைகளைச் சமநிலையான கோணத்தில் அணுகுவதன் மூலம், “சீதல ஈதல” நிகழ்ச்சியானது தற்போது சரண பார்வையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பெருமைமிக்க சுமதி விருதுகள் விழாவில் சரண TV அலைவரிசைக்கான விருதை, “சீதல ஈதல” நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான ஷெனால் ஜெயசேகர பெற்றுக்கொண்டார். 

சரண TV என்பது அறிவு, கலாசாரம் மற்றும் தரமான பொழுதுபோக்குகளைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசையாகும். கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள், சமகால நிகழ்வுகள், ஆவணப் படங்கள், விவசாயம், சுகாதாரம், சிறுவர் நிகழ்ச்சிகள், இசை, சமயம் மற்றும் தத்துவம், இளைஞர் நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கி, அனைத்து வயதினருக்கும் பொருத்தமான அர்த்தமுள்ள மற்றும் கவர்ச்சிகரமான உள்ளடக்கங்களைச் சரண TV வழங்கி வருகின்றது. இதன் மூலம் இலங்கையின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அவற்றை புதிய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதுடன், தேசிய அடையாளத்தை உலகிற்கு எடுத்துச் சென்று புதுமையான, அர்த்தமுள்ள மற்றும் உயர்தரமான நிகழ்ச்சிகளை உருவாக்குவதும் இடம்பெறுகின்றது. அத்துடன், இது பார்வையாளர்களின் அறிவு, சிந்தனை மற்றும் ரசனையையும் மேம்படுத்துகின்றது. இந்நாட்டின் முன்னணித் தொலைக்காட்சி விருது விழாக்களில் இதற்கு முன்னரும் சரண TV அலைவரிசை பல விருதுகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. சுமதி விருது விழாவில் கிடைத்த இந்த அங்கீகாரம், நோக்கத்துடன்கூடிய புதுமைகளை 

முன்வைக்கும் ஒரு அலைவரிசையாகச் சரண TV யின் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகின்றது. இவ்வெற்றியைத் தொடர்ந்து, தேசிய மட்டத்திலான முன்னணித் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு மத்தியில் சரண TV மேலும் ஒரு தனித்துவமான அங்கீகாரத்தைச் சுவீகரித்துக் கொள்ளும். 

SLT-MOBITEL PEOTV இல் True HD Quality தொழில்னுட்பத்தில் HD அலைவரிசை இல 305 ஊடாகவும், SD அலைவரிசை இல. 05 ஊடாகவும், இலங்கையில் எங்கிருந்தாலும் PEO MOBILE App ஊடாகவும் சரண TV ஐ இலவசமாக பார்வையிட முடியும். 

இந்த வெற்றியை நனவாக்கிக் கொள்வதற்காக தொடர்ச்சியாக வழங்கியிருந்த ஆதரவுக்காக, சரண TV எமது அன்பார்ந்த ரசிகர்களுக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

Mobitel 1278