Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய குழந்தைப்பருவ அபிவிருத்தி வாரம் 2026 நிகழ்வுடன் Atlas PlayPalz கைகோர்த்துள்ளது

Jul 30, 2026 - 05:37 PM

ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய குழந்தைப்பருவ அபிவிருத்தி வாரம் 2026 நிகழ்வுடன் Atlas PlayPalz கைகோர்த்துள்ளது
Mobitel Inner 1278

விளையாட்டு மூலம் குழந்தைகளின் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, செயல்பாடு சார்ந்த கற்றல் வர்த்தகநாமமான Atlas Axillia Co. (Pvt) Ltd நிறுவனத்தின் Atlas PlayPalz ஆனது இலங்கையின் ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி வாரம் 2026 நிகழ்வுக்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் கைகோர்த்துள்ளது. தரமான ஆரம்பகால கற்றல் அனுபவங்கள் குறித்த பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த நிகழ்வுடன் இணைந்துள்ளது. நாடு தழுவியரீதியில் இடம்பெற்ற ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி வாரம் 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட வெவ்வேறான மூன்று நிகழ்வுகளில் குழந்தைகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

செயல்பாடு சார்ந்த கற்றல் முறையானது குழந்தைகளின் அறிவுசார், உணர்வுபூர்வமான, சமூக, உடல் மற்றும் ஆக்கபூர்வமான வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை இந்நிகழ்ச்சி முன்னிலைப்படுத்தியது. 

ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியில் சுமார் 90 சதவீதமானது ஆரம்பகால ஆண்டுகளிலேயே நிகழ்கிறது. எனவே, அவர்களின் எதிர்கால கற்றல் மற்றும் வளர்ச்சியை வடிவமைப்பதில் முதல் ஏழு ஆண்டுகள் மிக முக்கியமானவையாக அமைகின்றன. ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சியை ஒரு குடும்பப் பொறுப்பாகவும் அதேவேளையில் ஒரு தேசிய முன்னுரிமையாகவும் அங்கீகரிக்கும் வகையில், விழிப்புணர்வையும் செயல்திறனையும் ஊக்குவிக்க இத்திட்டம் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புபட்ட முக்கிய தரப்பினரை ஒன்றிணைத்தது. 

2026-ஆம் ஆண்டிற்கான ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி வாரம் ஜூலை 14-ஆம் திகதி ஆரம்பமானது. இது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சி, ஜூலை 15 ஆம் திகதி கம்பஹாவில் உள்ள ஸ்ரீ போதி மைதானத்தில் நடைபெற்ற சிறுவர் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

இதில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள், படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் செயல்முறைக் கற்றலை ஊக்குவிக்கும் இடைச்செயற்பாடுகள் மிக்க வலயங்கள் மற்றும் கல்வி சார்ந்த விளையாட்டு அனுபவங்களில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, ஜூலை 16 ஆம் திகதி அலரி மாளிகையில் 500-க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அமர்வு, குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியில் ஆசிரியர்கள் ஆற்றும் முக்கிய பங்கையும், குறித்த நோக்கமுள்ள விளையாட்டு எவ்வாறு கற்றலை மேலும் ஈடுபாட்டுடன் மாற்றியமைக்கும் என்பதையும் எடுத்துக்காட்டியது. மேலும், வழிகாட்டப்பட்ட விளையாட்டின் மூலம் படைப்பாற்றல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், நுண் இயக்கத் திறன்கள், தகவல் தொடர்பாடல், கவனம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய Atlas PlayPalz செயல்பாட்டுக் கருவிகளின் அறிமுகத்தையும் இந்த நிகழ்ச்சி உள்ளடக்கியது. இந்த நிகழ்ச்சி, ஜூலை 20 ஆம் திகதி ஸ்ரீலங்கா பவுண்டேஷன் வளாகத்தில் நடைபெற்ற பெற்றோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இதில் மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டனர். வீட்டில் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க, அன்றாட விளையாட்டைப் பெற்றோர்கள் பயன்படுத்தக்கூடிய நடைமுறை வழிகளை இந்த அமர்வு பகிர்ந்துகொண்டது. 

அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “ஒரு குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆரம்ப ஆண்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி வாரம் 2026 என்பது, ஆரம்பகால குழந்தை அபிவிருத்தியை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதி விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குவதற்காகப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்” என்று கூறினார். 

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த Atlas Axillia Co. (Pvt) Ltd நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பொது முகாமையாளர் கசுனி பண்டார, “அட்லஸ் நிறுவனத்தில், குழந்தைகள் சுதந்திரமாக தேடலில் ஈடுபடவும், உருவாக்கவும், கண்டறியவும் இடமளிக்கப்படும்போது சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். Atlas PlayPalz மூலம், கற்றலைத் தொடர்ந்து விநோதமாக முன்னெடுக்கும் அதே வேளையில், ஆரம்பகாலக் கற்றலை மகிழ்ச்சியாகவும், குறித்த நோக்கமுள்ளதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றும் நடைமுறைக் கருவிகள் மற்றும் அனுபவங்களைக் கொண்டு குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவளிப்பதை நாங்கள் எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார். 

தனது புதிய பாகங்கள் அடங்கிய செயல்பாட்டுக் கருவிகளின் அறிமுகத்துடன், செயல்பாடு சார்ந்த கற்றல் தீர்வாகத் தனது பங்கை Atlas PlayPalz வலுப்படுத்துகிறது, மேலும் விளையாட்டின் மூலம் கற்றலை ஒரு மேம்பட்ட நிலைக்கு எடுத்துச் செல்கிறது. இந்த முன்னெடுப்பு, படைப்பாற்றல் மிக்க, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் திறமையான இளம் பயிலுனர்களை வளர்க்க உதவுவதோடு, குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவளிப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

Mobitel 1278