Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
கட்டான விபத்தைத் தொடர்ந்து கொள்கலன் லொறிக்கு தீவைத்த மூவர் கைது

Jul 31, 2026 - 11:52 AM

கட்டான விபத்தைத் தொடர்ந்து கொள்கலன் லொறிக்கு தீவைத்த மூவர் கைது
Mobitel inner

நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு  தீவைத்து சேதம் விளைவித்தமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 ஆகிய வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

 

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

அத்துடன், அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸ் காவிலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியின் 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்டை இடைப்பட்ட போலவலாட்ட பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட கொள்கலன் லொறியுடன், நீர்கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரு ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.

 

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன பகுதியைச் சேர்ந்த இருவராவர்.

 

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள CCTV காணொளிகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்குச் சேதம் விளைவித்ததில் தொடர்புடைய அனைத்துச் சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara