Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
Hotel Show Colombo 2026-இல் இலங்கையின் முதல் Facial Tissue Canisterயை அறிமுகப்படுத்திய FINEX Tissues

Aug 3, 2026 - 09:59 AM

Hotel Show Colombo 2026-இல் இலங்கையின் முதல் Facial Tissue Canisterயை அறிமுகப்படுத்திய FINEX Tissues
Mobitel Inner 1278

Global Consumer Products (Pvt) Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான FINEX Tissues நிறுவனம் கொழும்பு ஹோட்டல் ஷோ 2026 (Hotel Show Colombo 2026) கண்காட்சியில் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் கலந்துகொண்ட நிலையில், உள்ளூர் சந்தைக்காக ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்தியது. அது FINEX முகத் திசு தாள்கள் அடங்கிய உருளைக் கொள்கலன் தாங்கி ஆகும். இது FINEX Facial Tissue Canister Holder எனும் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் முகத் திசு உருளைக் கொள்கலன் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

BMICH வளாகத்தில் 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வானது, நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க வெற்றிகரமான அனுபவமாக அமைந்தது. ஜூலை 24 முதல் 26 வரை நடைபெற்ற கொழும்பு ஹோட்டல் ஷோவின் 18ஆவது கட்ட நிகழ்வில், 200- க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விருந்தோம்பல் துறை நிபுணர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் கொள்முதல் முகாமையாளர்களும் பங்கேற்றனர். இந்த வெற்றிகரமான நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக FINEX Facial Tissue Canister Holder அறிமுகம் அமைந்தது. 

FINEX காட்சிக்கூடத்தைப் பார்வையிட்டவர்களின் கவனத்தை, FINEX Facial Tissue Canister Holder-இன் கவர்ச்சிகரமான வடிவமைப்பும் நடைமுறைப் பயன்பாடும் பெரிதும் ஈர்த்தன. குறிப்பாக, ஹோட்டல் அறைகள், உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களில் இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து பலரும் ஆர்வத்துடன் வினவினர்.அந்த ஆர்வம் குறிப்பிடத்தக்க வர்த்தக வாய்ப்புகளுக்கும் இடமாளித்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற கண்காட்சியின் போது, FINEX Tissues நிறுவனத்திற்கு 150-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் விசாரணைகள் கிடைத்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தற்காலிக ஆர்வத்தை மட்டுமல்லாது, உண்மையான வர்த்தகச் சந்தை வாய்ப்பை பிரதிபலிப்பதாகவும் நிறுவனம் நம்புகிறது. 

FINEX Tissues நிறுவனத்தின் தாய் நிறுவனமான Global Consumer Products (Pvt) Ltd-இன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஐ. எல். தாவூத், தமது புதிய தயாரிப்புக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, தமது அறிமுக உத்தி சரியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சந்தையில் ஏற்கனவே உள்ள தயாரிப்பின் மற்றொரு வடிவத்தை அறிமுகப்படுத்துவது எமது நோக்கமல்ல. விருந்தோம்பல் துறையின் கொள்முதல் பொறுப்பாளர்களுக்கும், எமது இறுதி நுகர்வோருக்கும் உண்மையிலேயே புதியதொரு தீர்வை வழங்கவே நாம் விரும்பினோம். மூன்று நாட்களில் நடைபெற்ற ஏராளமான கலந்துரையாடல்கள், அவர்கள் தேடியது அதுவே என்பதை எமக்கு உறுதிப்படுத்தின, என்றார். 

இந்த புதிய Facial Tissue Canister Holder-உடன், FINEX நிறுவனத்தின் விரிவான சுகாதாரத் தயாரிப்புகளான FINEX, ECO, Guardian மற்றும் Flexee தயாரிப்பு வரிசைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இத்தயாரிப்புகள் அனைத்தும் உயர்தர தரம், நிலைத்தன்மை மற்றும் விருந்தோம்பல் துறையின் தேவைகளுக்கு ஏற்ற நடைமுறை வடிவமைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. Hotel Show Colombo தற்போது இலங்கையின் விருந்தோம்பல் துறைக்கான முன்னணி வர்த்தகக் கண்காட்சியாக வளர்ச்சி பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதில் FINEX பங்கேற்றிருப்பது, கொள்முதல் செய்பவர்களை நேரடியாகச் சென்றடைய இந்தக் கண்காட்சி வழங்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக கொழும்பு ஹோட்டல் ஷோ கண்காட்சியின் மூலம் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி வந்த FINEX Tissues நிறுவனத்திற்கு, இந்த ஆண்டு சாதாரண பங்கேற்பிலிருந்து தயாரிப்பு முன்னணித் தலைமையை நோக்கிய முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஏற்கனவே சந்தையில் உள்ள தயாரிப்பின் மற்றொரு வடிவத்தை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, முற்றிலும் புதிய தயாரிப்பு வகையை முதன்முறையாக அறிமுகப்படுத்தியதன் மூலம், உள்ளூர் வழங்குநர்களிடமிருந்து இதுவரை காணப்படாத புதுமையான தீர்வுகளை நாடும் விருந்தோம்பல் துறையின் கொள்முதல் செய்பவர்களிடையே FINEX தனது தனித்துவமான நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.இந்த ஆண்டு கண்காட்சியில் தமது காட்சிக்கூடத்திற்கு வருகை தந்து, நிறுவனக் குழுவினருடன் கலந்துரையாடிய அனைவருக்கும் FINEX Tissues தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு கிடைத்த உற்சாகமான வரவேற்பு, இலங்கையின் விருந்தோம்பல் துறைக்காக புதுமையானதும், நிலைத்தன்மை கொண்டதுமான சுகாதாரத் தீர்வுகளை தொடர்ந்து உருவாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Global Consumer Products (Pvt) Ltd என்பது FINEX, ECO SACK, Guardian மற்றும் Flexee உள்ளிட்ட முன்னணி வர்த்தக நாமங்களின் கீழ் புதுமையான, சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தி மற்றும் விநியோகிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பல்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் வர்த்தக மற்றும் வீட்டு உபயோக சந்தைகளுக்கு சேவைகளை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப தனிப்பயன் ஒப்பந்த உற்பத்தி சேவைகளையும் வழங்கி வருகிறது. 

150-க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் 1,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்ட Global Consumer Products (GCP) நிறுவனம், பெருநிறுவனங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. உயர்தரத் தரநிலைகள் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கங்களின் மூலம், இந்நிறுவனம் தனது துறையில் தரத்திற்கும் புதுமைக்கும் முன்மாதிரியாக தொடர்ந்து திகழ்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

Mobitel 1278