Sep 4, 2026 - 05:48 PM

கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 'ஹாய்'. இப்படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, கதிர், காவ்யா என பலரும் நடித்துள்ளனர்.
காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள 'ஹாய்' திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 7 நாட்களில் இப்படம் உலகளவில் 11 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள நல்ல பிக்கப் ஆகும்.



























