Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
மகன், மகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட சூர்யா - ஜோதிகா!

Sep 16, 2026 - 11:49 AM

மகன், மகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட சூர்யா - ஜோதிகா!
Mobitel Inner 1278

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்களாக இருப்பவர்கள் சூர்யா- ஜோதிகா தம்பதி. இவர்கள் 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் முன்மாதிரி தம்பதியாக திகழ்கின்றனர். நட்சத்திர தம்பதியர்களான சூர்யா- ஜோதிகா ஜோடி திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக நடிகை ஜோதிகா தெரிவிக்கையில், 

தங்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து கூறியிருப்பதாவது, 

எங்களின் 20 ஆண்டு கால காதலையும், சண்டைகளையும் கொண்டாடும் ஒரு திருமண உறுதிமொழி ஏற்பு. இது குறைகளற்ற திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல. 

இது எங்களின் குறைகள், விட்டுக்கொடுத்தல், புரிதல்கள், தியாகங்கள் மற்றும் சுயநலமின்றி ஒருவரையொருவர் நேசித்ததன் கொண்டாட்டம். இது எங்களுக்கான கொண்டாட்டம். நாங்கள் ஒருவருக்காக ஒருவர் மாறியதன் கொண்டாட்டம். 

"நிஜத்திற்கு வெகுதூரம் இருப்பதாக நினைத்த ஒரு கனவு, இப்போது என் வாழ்நாள் முழுவதும் நான் ரசித்து வாழும் நிஜமாக மாறியிருக்கிறது. என்ன ஒரு முரண்?" என ஜோதிகா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது திருமண வாழ்க்கையின் புதிய உறுதிமொழிகளையும் ஜோதிகா பகிர்ந்துள்ளார். 

சூர்யா - ஜோதிகா இருவரும் 1999 ஆம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தின் போது முதன்முதலில் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து 'காக்க காக்க' திரைப்படப் படப்பிடிப்பின் போது இவர்களின் நட்பு காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கடைசியாக ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தற்போது தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

Mobitel 1278