Jul 4, 2025 - 03:00 PM -
0
வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தின் மூலமூர்த்திக்கு 108 கலசாபிஷேகமும் சங்காபிஷேகமும் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றன.
கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அம்மன் உள்வீதியுடாக வலம் வந்து அருள்பாலித்தார்.
இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-யாழ். நிருபர் ரமணன்-