Sep 17, 2025 - 02:11 PM -
0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வர பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதோடு சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.
யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆதின பிரதம குரு நகுலேஸ்வர குருக்கள் சிறிரங்கநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் ஆலயத்தொண்டர்கள் பக்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கை விஐயத்தின் போது யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் சந்நிதானத்திற்கு வருகை தந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
-யாழ். நிருபர் பிரதீபன்-