Nov 18, 2025 - 12:16 PM -
0
நானுஓயா கிளரண்டன் தோட்டத்தில் ஐயப்பன் ஆலயத்தில் பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி குருசாமி முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க நேற்று (17) மாலை அணிந்துக்கொண்டனர்.
நானுஓயா கிளாரண்டன் தோட்டத்தில் அருகில் உள்ள ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள் ஐயப்பன் கோவிலில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன அதிகாலை முதல் அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குருசாமிகள் பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்கள். இதையொட்டி அய்யப்பன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம் இதன்படி கார்த்திகை மாதப் பிறப்பைத் தொடர்ந்து கிளரண்டன் தோட்டம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புதிய ஐயப்பன் சிலை பிரதிஷ்டை தொடர்ந்து கணபதி ஓமம் நடைபெற்று ஆலயத்தில் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து கொண்டனர். அப்போது, ‘சாமியே சரணம்’ என்ற பக்திகோஷம் பக்தர்கள் மத்தியில் எதிரொலித்தது.
குறித்த பூஜையில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு விஷேட அபிஷேகத்துடன் ஐயப்பன் பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றது.
-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-

