Dec 5, 2025 - 06:20 PM -
0
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் 61 ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வானது இன்று (05) யாழ்ப்பாணம் - வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
முதலில் கூட்டுறவாளர் வீரசிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, கூட்டுறவாளர் வீரசிங்கத்தின் நினைவுப் பேருரை, விருந்தினர்கள் உரை, கூட்டுறவாளர் வீரசிங்கத்தின் நினைவாக ஏற்கனவே நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றியீட்டியோரது பேச்சுக்கள், கூட்டுறவுப் பணியாளர்களுக்கான கௌரவிப்புகள், போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.
யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கூட்டுறவு பணியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
-யாழ். நிருபர் கஜிந்தன்-

