Dec 9, 2025 - 03:09 PM -
0
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கிறிஸ்தவ மன்றம் நடாத்தும் ஒளிவிழாவானது இன்று (09) காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபர் ம.இக்கினேசியஸ் கலந்து கொண்டார்.
இன்றைய நிகழ்வில் யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை வின்சென்ற் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.
-யாழ். நிருபர் கஜிந்தன்-

