Dec 19, 2025 - 12:53 PM -
0
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ இணுவில் மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயரின் சித்திரத்தேர் இரதோற்சவம் இன்று (19) பக்திபூர்வமாக நடைபெற்றது.
கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயருக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, எம்பெருமான் வசந்த மண்டபத்திலிருந்து பஞ்சமுக ஆஞ்சநேயராக எழுந்தருளி, உள்வீதியினூடாக வலம் வந்து, வெளிவீதியில் சித்திரத்தேரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இத்திருவிழாவினை தேவஸ்தான பிரதம குரு செ. சுந்தரேஸ்வரக் குருக்கள் நடத்தி வைத்தார். இதில் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளைப் பெற்றுச் சென்றனர்.
-யாழ். நிருபர் ரமணன்-

