Jan 5, 2026 - 12:32 PM -
0
2026 புத்தாண்டுப் பிறப்பைத் தொடர்ந்து, மலையகப் பெருந்தோட்ட மக்கள் தமது காவல் தெய்வங்களையும், தொழில் தெய்வமான தேயிலைச் செடியையும், இயற்கை தெய்வங்களையும் வணங்கித் தமது பணியைத் தொடங்குவது பாரம்பரிய வழக்கமாகும்.
அந்த வகையில், ஹங்குரன்கெத்த, ஹேவாஹெட்ட, ஹேப் தோட்டக் கீழ் பிரிவு மக்கள் இன்று (05) காலை தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், புத்தாண்டுக்கான தமது தொழிலை முறையாகத் தொடங்கினர்.
-கண்டி நிருபர் ராஜ்-

