Jan 8, 2026 - 05:58 PM -
0
படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (08) மாலை மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மற்றும் மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளர்களினால் லசந்தவிக்ரமதுங்கவின் நினைவுரைகள் நடைபெற்றன.
-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

