Jan 23, 2026 - 11:50 AM -
0
நுவரெலியாவில் இன்று (23) பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது மேலும் கடுமையான குளிரான காலநிலையும் நிலவி வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகத் நுவரெலியாவில் தொடர்ந்து கடுமையான துகள் உறைபனி பொழிவால் அதிகாலையில் சூழப்பட்டுள்ளது.
குறித்த துகள் பனிப்பொழிவு காரணமாக மலையக மரக்கறிச் செய்கை, மலர் உற்பத்தி மற்றும் தேயிலை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக நுவரெலியா குதிரை பந்தய திடல், கிரகரி வாவி கரையோரம் ஆகிய இடங்களில் அதிகம் துகள் பனிப்பொழிவு காணப்படுகின்றன இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் புகைப்படம் எடுத்தும் ரசித்தும் ஆச்சரியமாக பார்வையிட்டும் வருகின்றனர் .
இதேவேளை இந்த நாட்களில் இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல் நேரங்களில் கடும் உஷ்ணமான காலநிலையும் நிலவுகின்து.
குறிப்பாக மாலை 5 மணிக்கு மேல் தொடங்கும் குளிர் காலை 9 மணி வரை நீடிக்கிறது.
சுற்றுலா பயணிகள் இனிமையாக புகைப்படம் எடுத்து களிக்ககூடிய இடமாகவும், பார்ப்பவர்கள் மனதிற்கு புத்துணர்ச்சி தரக் கூடிய அமைதியான இடமாகவும் நுவரெலியா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-

