Jan 27, 2026 - 02:00 PM -
0
பொகவந்தலாவ நகர், ஸ்ரீ ஈழத்து பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் 90 ஆவது வருட முத்தேர் பவணி இன்று (27) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வசந்த மண்டப பூஜைகளைத் தொடர்ந்து, மும்மூர்த்திகளின் விக்கிரகங்களுக்கு முன்பாக பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க விநாயகப் பெருமான், அம்பாள், மற்றும் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகிய மும்மூர்த்திகளும் உள்வீதி உலா வந்தனர்.
இன்று காலை 9 மணியளவில் விசேட வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் இரதங்களில் (தேர்களில்) நகர்வலம் வந்தனர். இதன் போது பொகவந்தலாவ நகரம் முழுவதும் மும்மூர்த்திகளுக்கும் பக்தர்கள் விசேட பூஜைகளைச் செய்து வழிபட்டனர்.
கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம், நாளை (28) நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மலையக நிருபர் சதீஸ்குமார்-

