Mar 3, 2026 - 10:24 AM -
0
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்புத்துறை உப்புக்குளம் ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் தேவஸ்தானத்தின் வருடாந்த இரதோற்சவம் நேற்று (02) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
கடந்த 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இம் மகோற்சவத்தில், நேற்று இரதோற்சவமும், இன்று (03) தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளன. அன்று மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் இனிதே நிறைவடையும்.
இதில் பல இடங்களிலிருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
--