Mar 6, 2026 - 08:16 PM -
0
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கல்லூரியின் பிரதான மண்டபம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையின் 1990 சாதாரண தர மற்றும் 1993 உயர்தரப் பிரிவு மாணவர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட விவேகானந்தர் கலையரங்கு இன்று (06) மாணவர் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் மூ. மூவேந்தன், பழைய மாணவர் சங்க பிரதித் தலைவர் எஸ். மீனாட்சி சுந்தரம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.