Mar 8, 2026 - 08:07 PM -
0
பெண்களின் வலிமை துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் நகர சிறுவர் பூங்கா அரங்கில் மன்னார் குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பகுதி பெண்கள் அமைப்புகள் கூட்டாக இணைந்து சர்வதேச மகளிர் தின நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டதோடு மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் சாதனைப் பெண்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். .
--
