Mar 11, 2026 - 06:09 PM -
0
கற்சிலைமடு பண்டாரவன்னியன் நாடகக் கலாமன்றம் மிகச் சிறப்பாக ஏற்ப்பாடு செய்த பாரம்பரிய 'அரிவிவெட்டுச் சிந்து அறுவடை நிகழ்வு' ஒட்டுசுட்டான் புளியங்குளம் குருவிச்சையாறு பாலத்துக்கு அருகில் கிருஸ்ணராஜா கவிதாயினியின் வயலில் சிறப்பாக இடம்பெற்றது.
பண்டாரவன்னியன் நாடக கலா மன்றத்தின் போசகர் சி.நாகேந்திரராசா தலைமைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர் தி. பிரம்மியா, கௌரவ விருந்தினர்களாக தொழிலதிபர்களான இ. கணபதிப்பிள்ளை மற்றும் இ. சத்தியசீலன் ஆகியோரும் விவசாய திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிஷாந்தன் ஆலோசனையிலும் வழி காட்டலிலும், கலாபூசணம் சி. வேதவனம் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச கலாசார உத்தியோகத்தர் புஸ்பராணி மணிசேகரம் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் பிரதேச அண்ணாவிமார்கள் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் குறித்த நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
--
