Mar 13, 2026 - 10:14 AM -
0
'பொன் அணிகளின் போர்' என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 109 ஆவது ஆண்டு கிரிக்கெட் போட்டி நேற்று (12) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி, யாழ்ப்பாணக் கல்லூரி அணி தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் தலைவர் உ.ஜோன்சன் மற்றும் சு.தக்சன் ஆகியோர் களம் இறங்கினர்.
சிறப்பாக ஆடி இருவரும் 47 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், 7 ஓட்டங்களுடன் சு.தக்சன் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, சிறப்பாக விளையாடிய அணித்தலைவர் உ.ஜோன்சன் 41 ஓட்டங்களைப் பெற்று செ.சிமித் செனாரியின் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டத்தின் முதலாவது இன்னிங்ஸ் ஆரம்ப ஆட்டத்தினை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிவீர்களான அணித்தலைவர் உ.ஜோன்சன் மற்றும் சு.தக்சன் ஆரம்பித்தனர் .
போட்டியின் 30 ஓவர்கள் முடிவில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றுத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது.
இதுவரை நடைபெற்றுள்ள 109 போட்டிகளில், புனித பத்திரிசியார் கல்லூரி 35 முறையும், யாழ்ப்பாணக் கல்லூரி 17 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 31 போட்டிகள் சமநிலையில் (Draw) முடிவடைந்துள்ளன. ஏனைய போட்டிகள் தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை.
இப்போட்டியானது நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
--
