Mar 19, 2026 - 02:21 PM -
0
கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு விழாவினையிட்டு, தரம் 5 மாணவர்களுக்கு திறன்மிகு வகுப்பறையினை, (ஸ்மார்ட் வகுப்பறை) 2002/2005 வருடம் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்டது.
தரம் 5 மாணவர்களுக்கு திறன்மிகு வகுப்பறையினை கல்லூரி அதிபர் திரு. மூ.மூவேந்தன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வு இன்று (19) காலை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
