Mar 25, 2026 - 12:27 PM -
0
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா கடந்த 23 ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பிரான்சிஸ் கனியூட், தலமையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்று கறியமுதம் பரிமாறி 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் இமக்குலேற்றா புஷ்பானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்கள்.
--
