Mar 30, 2026 - 03:19 PM -
0
பொகவந்தலாவ, லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (30) பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
இன்று காலை மங்கள வாத்தியங்கள் முழங்க விசேட அலங்கார பூஜைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, "அரோகரா" கோஷத்திற்கு மத்தியில் விநாயகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் முருகப்பெருமான் ஆகிய மும்மூர்த்திகளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வெளிவீதி உலா வந்தனர்.
வசந்த மண்டப பூஜைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் சிவசிறி லிங்கம் ரட்னசிங்கம் குருக்கள் தலைமையில் நடைபெற்றன.
முன்னதாக நேற்று (29) தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றதுடன், நாளை (31) தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--
