Mar 31, 2026 - 02:14 PM -
0
இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான 2 ஆம் ஆண்டு கம்பன் விழா, மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில் இன்று (29) இடம்பெற்றது.
கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் திரு. த. இன்பராசா அவர்களின் தலைமையில், கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட காலை அமர்வு அயோத்தி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மனக்கணித திறமையால் அனைவரையும் கவர்ந்த 07 வயது சிறுமி காவியஸ்ரீ சுப்ரமணியம் சாதனையைப் பாராட்டி, “மனிதக் கணிப்பான்” (Human Calculator) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
