Apr 7, 2026 - 04:36 PM -
0
இலங்கை இராணுவத்தின் மூத்த இராணுவ தமிழ் சார்ஜண்ட் கன முத்துராஜாவிற்கு இலங்கை இராணுவத்தின் மரியாதையுடன் யாழ். சங்கானையில் இறுதி சடங்கு முன்னெடுக்கப்பட்டது.
யாழ். சங்கானையை சேர்ந்த கன முத்துராஜா 1958 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்தின் நிலையான படைப்பிரிவில் திருகோணமலை இராணுவ ஆட்சேர்ப்பு பள்ளியின் மூலம் இணைந்தார்
பின்னர் 4 ஆவது பீரங்கி ரெஜிமன்டில் பணியமர்த்தப்பட்டார். இலங்கை இராணுவம் சுதந்திர இலங்கையின் பின்னர் நிறுவப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்தின் பீரங்கி ரெஜிமன்டின் ஆரம்ப குடும்ப உறுப்பினராக இலஙாகை தமிழராக இணைந்தார்.
இலங்கை இராணுவத்தில் மட்டுமல்லாது சிறந்த குத்துச்சண்டை வீரனாக இலங்கை குத்துச்சண்டை சங்கத்தின் உறுப்பினராக திகழ்ந்தார்.
இவர் இலங்கை இரணாவத்தில் குற்றமற்ற நேர்மையான22 ஆண்டு கால சேவைக்காக சேவைக்காக இலங்கை குடியரசு இராணுவ பதக்கத்தினை 1972 ஆம் ஆண்டிலும் இலங்கை இராணுவ 25 ஆண்டு நிறைவு பதக்கம் 1974 எனும் விருதுகளால் தனது சேவைகளுக்கு ஆகியவற்றால் கௌரவிக்கபட்டவர் ஆவார்.
இந்நிலையில் 1980 ஓய்வு பெற்ற அவர் யாழ். சங்கானையில் வசித்து வந்த நிலையில் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் சங்கானையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி கிரியைகள் முன்னெடுக்கப்பட்டு நல்லடக்கம் சங்கானயில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது இலங்கை இராணுவத்தின் உயர் மரியாதையுடன் துப்பாக்கி வேட்டுகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இலங்கை சுதந்திரமடைந்த ஆர்மப காலகட்டங்களில் தமிழர்கள் பலர் உயர் பதவிகள் வகித்த நிலையில் அதற்கு சான்றாக கன முத்துராஜா திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
--
