Apr 21, 2026 - 12:58 PM -
0
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் இன்று (21) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிலையில், யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம், மரியன்னை பேராலய வளாகத்தில் உள்ள ஆயர் இல்ல சிற்றாலய மூன்றலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு வழிபாடும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளளை டேவிட் அவர்களால் அஞ்சலி உரையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
