Apr 22, 2026 - 03:58 PM -
0
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண வடிவமைப்பு அலுவலகம் இன்று (22) திறந்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவினால் குறித்த அலுவலகத்திற்கான பெயர் பலகை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண அலுவலகத்தில் குறித்த வடிவமைப்பு அலுவலகம் தனி அலகாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், பணியாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் ஸ்ரீ.பாவானந்தராஜா ஆகியோருடன் அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
--
