Apr 25, 2026 - 10:55 AM -
0
நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
இலங்கையில் முதன்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட இடத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க இந்தப் பாடசாலையின் புதிய இரண்டு மாடி கட்டடத் திறப்பு விழா, பாடசாலை அதிபர் எஸ். மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன கலந்து கொண்டார். அத்துடன் நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்ன மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.
மேலும், இவ்விழாவில் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
--
