May 1, 2026 - 10:05 AM -
0
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று (30) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மதத் தலைவர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவாக கவிஞர் மாணிக்கம் ஜெகன் வரிகளில் விமலின் இசையமைப்பில் கேதீஸ்வரனால் பாடப்பட்ட பாடல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமை சிறப்பாகும்.
தொடர்ந்து மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களது நினைவுரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழ் உணர்வாளர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
--
