May 1, 2026 - 12:43 PM -
0
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் 33 ஆவது சிரார்த்த தின நிகழ்வு இன்று (01) காலை கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் அமைந்து காணப்படும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் திருவுருவச் சிலை அமைந்து காணப்படும் வளாகத்தில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது தாயார் ஹேமா பிரேமதாச உள்ளிட்ட ரணசிங்க பிரேமதாசவின் குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அன்னாரது உருவச்சிலைக்கு இங்கு மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
