May 2, 2026 - 05:38 PM -
0
சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா நேற்று (01) வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பத்தில் பிள்ளையார் வழிபாடுகளை தொடர்ந்து மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் நாகம்மாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
பின்னர் நாகம்மாள் உள்வீதியூடாக வலம்வந்து தேரில் எழுந்தருளியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முதலாவது தேரில் பிள்ளையாரும், அடுத்த தேரில் முருகப் பெருமானும் வலம் வர மூன்றாவது தேரில் நாகம்மாள் எழுந்தருளியாக வீற்றிருந்து, வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்போது பக்தர்கள் காவடி, பாற்செம்பு, அங்கப் பிரதிஷ்டை, கற்பூரச் சட்டி மூலம் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
இந்த இரதோற்சவத்தை காண இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்தும் மட்டுமல்லாமல், புலம்பெயர் தேசங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. இலங்கையில் நாகம்மாளுக்கு காணப்படும் இரண்டாவது பெரிய ஆலயம் இதுவாகும்.
--
