May 11, 2026 - 11:31 AM -
0
நயினாதீவு ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய பிரம்மாண்ட புத்தர் சிலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த பெருமளவான பௌத்த மக்கள், பல்வேறு சமய சம்பிரதாயங்களுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். நயினாதீவுக்கு வருகை தந்த அவர்கள், முதலில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக நாகவிகாரைக்குச் சென்ற பௌத்த அடியார்கள், அங்கு நடைபெற்ற விசேட வழிபாடுகளிலும் புத்தர் சிலை திறப்பு விழாவிலும் பங்குகொண்டனர்.
--
