May 18, 2026 - 09:24 AM -
0
மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச '2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்' போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ருக்குனுதீன் நைலா உள்ளடங்களாக சாதனை மாணவர்கள் 5 பேரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (17) காலை வி.சி.எம்.ரி (V.M.C.T) கலை மன்றத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் பிரபல கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.ஜஸ்மின் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவியான ருக்குனுதீன் நைலா என்பவர் மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச '2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்' போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில் 52 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொள்ளவுள்ளார்.
மன்னார், உப்புக்குளம் கிராமத்தில் வசித்து வரும் மன்னார் அல் - அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவியான ருக்குனுதீன் நைலா வட மாகாணத்தில் இருந்து போட்டிக்கு செல்லும் ஐந்து மாணவர்களில் ஒருவராவார்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், நகர சபை உறுப்பினர் முஹமட் இம்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
--
