May 23, 2026 - 02:25 PM -
0
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய, இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரைப் பயணம் இன்று காலை பக்திப் பெருக்குடன் ஆரம்பமாகியது.
800 கிலோமீற்றர்களுக்கும் அதிக தூரத்தைக் கொண்ட இந்தப் புனிதப் பயணம், சுமார் 54 நாட்கள் தொடரவுள்ளது.
காடுகள், மலைகள், ஆறுகள் எனப் பல இயற்கை தடைகளைக் கடந்து, முருகப்பெருமானின் திருநாமங்களைப் போற்றிப் பாடியவாறு அடியவர்கள் நடந்தே கதிர்காமத்தைச் சென்றடையவுள்ளனர்.
நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இந்தத் திருத்தலப் பாதயாத்திரையில், இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த முருக அடியவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழர்கள், சிங்களவர்கள் என எந்தவொரு இன, மத வேறுபாடுகளுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து முருகப்பெருமானின் புகழைப் பாடியவாறு இப்பயணத்தை மேற்கொள்கின்றமை இதன் சிறப்பம்சமாகும்.
--
