May 25, 2026 - 04:07 PM -
0
நுவரெலியா - பம்பரகலை தோட்டத்தில் வரம் அருளும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா கடந்த 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தொடர்ந்து கடந்த 23 ஆம் திகதி புண்ணிய வாசகம் கிரிகையுடன் பால்குட பவனி நடைபெற்று பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மாலையில் வேட்டை திருவிழாவும் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று (24) அன்று பறவைகாவடி மற்றும் தீ மிதிப்பு நடைபெற்று மாலையில் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
இன்று (25) சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜையுடன் தீப ஆராதனை இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க மேள வாத்தியங்களுடன் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்படட தேரில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களின் வெளி வீதியூடாக தேரேறி வலம் வந்ததது குறித்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்று வருகிறது.
அதனை நாளை (26) பச்சை சாத்துதல் மாலை மாவிளக்கு பூஜையுடன் பூங்காவன பூஜை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நாளை மறுதினம் (27) தீர்த்த உற்சவமும் கரகம் வீதி உலா என்பன நடைபெற்று கொடி இரக்கத்துடன் விழா நிறைவுபெறும்.
தொடர்ந்து நுவரெலியா - பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவழகைக் காண ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
--
