Jun 6, 2026 - 04:09 PM -
0
இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்த தினம் இன்று (06) யாழ். நல்லூர் பகுதியில் உள்ள சங்கியன் உருவச் சிலையில் சங்கிலியன் அறக்கட்டளையின் செயலாளர் சிறீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
மக்கள் விளக்கேற்றலுடன் ஆரம்பித்த குறித்த நிகழ்வில் சங்கிலிய மன்னனின் திரு உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் டிவி அரவிந்தராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், ஸ்ரீ சுந்தர ஆஞ்சனே ஆலய பிரதம குரு சுந்தரேஸ்வர குருக்கள், இந்து சமய பேரவை தலைவர் சக்தி கிரீபன், சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
--
