Jun 23, 2026 - 09:35 AM -
0
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் இராணுவத்தினரால் வீடு கட்டி வழங்குவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23) காலை இடம்பெற்றது.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் குறித்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் வைக்கப்பட்டது.
இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ லண்ட்ஸ்கோப்ரல் எம்.ஆர் ராஜா என்பவருக்கு குறித்த வீடு கட்டி வழங்கப்படவுள்ளது.
இராணுவத்தின் சேவா வனிதா திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.
நிகழ்வில் சர்வமத தலைவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட கட்டளை தளபதி கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ தளபதிகள், பொலிஸார் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
--
