Jul 6, 2026 - 09:43 AM -
0
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற, ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் காரைநகர் சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, இன்று (06) காலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இன்று அதிகாலை முதல் நடைபெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து, பிரதான கும்பங்கள் வீதி வலம் வர, மகா கும்பாபிஷேகப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இப்பெருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழகத்திலிருந்து ஆதீனங்கள் வருகை தந்தமை இவ்விழாவின் விசேட அம்சமாகும்.
குறிப்பாக, பேரூர் ஆதீனம், பழனி ஆதீனம் மற்றும் தருமை ஆதீனம் உள்ளிட்டோர் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
--
