Jul 10, 2026 - 03:38 PM -
0
நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியை இன்று (10) காலை குருக்கல் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
தாழ்வுபாடு பங்குத்தந்தை அருட்தந்தை ரெஜினோல்ட் அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது அருட்தந்தையர்கள், இருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழாவுக்கான கொடியேற்றத்தின் போது நானாட்டான் பங்கிற்குற்பட்ட 8 துணை ஆலயங்களின் கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடி இறக்கப்பட்ட நிலையில் குறித்த துணை ஆலயங்களின் கொடிகளும் இறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
--
