Aug 3, 2026 - 09:56 AM
முல்லைத்தீவு, பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா நேற்று (02) மிகச் சிறப்பாக இடப்பெற்றது.
பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் இவ் ஆலயத்தில் பல்வேறு நெருக்கடிகள் இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆலய வழிபாடுகள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல் விழா நேற்று மிகச் சிறப்பாக இடப்பெற்றது.
நேற்று காலை விசேட அபிசேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து, மதிய பூசை வழிபாடுகளின் பின்னர் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல் விழா பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பெருந்திரளான அடியவர்களும் பங்கேற்றிருந்தனர்.
தொடர்ந்து மாலை வேளையிலே நாயாறு முனியப்பர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு கச்சை நேர்ந்து மடைபரவி வளர்ந்து நேர்ந்து பொங்கல் இடம்பெற்று அதனை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று பரிகளம் வழிவிடுதலோடு இன்று (03) அதிகாலை வருடாந்த பொங்கல் இனிதே நிறைவடைந்தது.
--

