Sep 11, 2026 - 10:53 AM

வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், 25 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த நிலையில், பக்திப் பெருக்குடன் இடம்பெற்ற கொடியிறக்க உற்சவத்துடன் நேற்று (10) இனிதே நிறைவடைந்தது.
மகோற்சவத்தின் சிகர நிகழ்வுகளான 24 ஆம் நாள் சித்திரப் பேரரதேர்த் திருவிழாவும், 25 ஆம் நாள் காலை தீர்த்தத் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, அன்று மாலை வசந்த மண்டபத்தில் எம்பெருமான் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்குப் விசேட பூசைகள் மற்றும் தீபாராதனைகள் இடம்பெற்றன.
பூசைகளைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் மற்றும் பக்தர்களின் "அரோகரா" கோஷ முழக்கத்திற்கு மத்தியில், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் ஏற்றப்பட்டிருந்த திருக்கொடி முறையான ஆகம விதிகளின்படி கொடியிறக்கப்பட்டது.
--

























