Sep 16, 2026 - 01:50 PM

''வளமான நாடு, அழகான வாழ்வு புத்துயிர்க்கும், புது நகரம்'' எனும் தொனிப் பொருளில் உள்ளூராட்சி வாரம் 2026 அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக வலிகாமம், தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொது பயன்பாட்டு தினமான இன்று (16) பத்தாம் வட்டாரத்துக்கு உட்பட்ட மானிப்பாய் பொன்னலை வீதியில் அமைந்துள்ள வெள்ள வாய்க்கால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பிரதேச சபை தவிசாளர் க.ஜெசிதன் செயலாளர் சபேசன் உறுப்பினர்களான கலொக் கணநாதன் உஷாந்தன், வீரசிங்கம் மறறும் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
--

























