ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (13.02.2026)!

Feb 13, 2026 - 09:18 AM -

0

இன்றைய ராசிப்பலன் (13.02.2026)!

இன்று (13) தனுசு ராசியில் மூலம் பின் பூராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று சூரியனின் மாற்றம் உடல் நலம், சிந்தனையை மேம்படுத்தும். கும்பத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது. முதலீடுகள் லாபத்தை தரும். இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று நம்பிக்கையும் திறமையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். சில நாட்களாக இருந்த தொந்தரவுகள் விலகும். சொத்து தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்சனைகள் விலகும். சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளி ஆட்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனை உங்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. அதனால் கண் மூடித்தனமாக யாரும் நம்ப வேண்டாம். சொந்த சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. பணியிடத்தில் அதிக முயற்சி தேவைப்படும். ஆபத்தான வணிக நடவடிக்கைகள், முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். 

ரிஷப ராசி பலன் 

ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலான நேரம் உங்களுடைய வீட்டை பராமரித்தல் அல்லது அலங்கரிப்பது தொடர்பான விஷயங்களில் செலவிடுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் இதிலும் நிதானமாக இருப்பது, எந்த செயலை செய்தாலும் சரியான திட்டமிடல் தேவை. இன்று மாணவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உண்டு. அதனால் கடின முயற்சி தேவைப்படும். உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் பட்ஜெட் போட்டு செயல்படவும். வணிக நடவடிக்கைகளில் கவனம் தேவை. குடும்ப சூழலில் அமைதியை கடைப்பிடிக்கவும். 

மிதுன ராசி பலன் 

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று கிரகங்களின் அமைப்பு மற்றும் நல்ல பார்வை உங்களுக்கு சாதகமானதாக அமையும். தொடர்ச்சியான முயற்சிகள் பெரும்பாலான வேலைகளில் வெற்றியைத் தரும். இன்று மன அமைதி கிடைக்கும். சேவை துறையில் மக்களுடன் நேர்மறையான அணுகுமுறை இருக்கும். இன்று சிலர் பொறாமையால் உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. இப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகி இருக்கவும். உங்கள் வீட்டில் சிலரின் உடல்நலம் கவலை தரகூடியதாக இருக்கும். இன்று தொழில் செய்யக்கூடியவர்கள் சந்தைப்படுத்துவதற்காகவும் முன்னேற்ற நடவடிக்கைகளிலும் அதிக நேரம் செலவிடுவீர்கள். 

கடக ராசி பலன் 

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்களின் வீட்டில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். வேலை தொழில் தொடர்பாக எடுக்கும் முன்முயற்சி மற்றும் ஈடுபாடு நல்ல வெற்றியை தரும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்தியை பெறலாம். சந்தையில் உங்கள் போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக சரி செய்ய வாய்ப்பு உண்டு. அதனால் நீங்கள் எந்த விஷயத்திலும் ஒழுக்கத்தை தவறவிட வேண்டாம். கவனமாக செயல்படுவோம். கோபத்தை தூண்டும் சூழ்நிலை இருந்தாலும் நிதானம் தேவைப்படும். அமைதியான அணுகுமுறை மரியாதையை பெற்று தரும். நாளின் தொடக்கத்தில் சிறிது சலசலப்பு இருக்கும். 

சிம்ம ராசி பலன் 

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் உங்களுடைய திறமைகளை மற்றவர்கள் அங்கீகரிப்பார்கள். இன்று ராசிநாதன் சூரியன் சமசப்தம ஸ்தானத்தில் இருப்பதும், சந்திரனின் அமைப்பும் சாதகமாக இருப்பது உங்களுக்கு பல இடத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும். அதே சமயம் சிலரால் உங்கள் மனம் திசை திருப்பப் படலாம். அதனால் மனதை கட்டுப்படுத்தி செயல்பட்டால் வெற்றி சாத்தியப்படும். உங்களுடைய கோபமும், ஆணவமும் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வேலை தொடர்பான நலம் முயற்சிகள் அனைத்து பணிகளையும் சீராக முடிக்க முடியும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசியை சேர்ந்தவர்கள் இன்றைய கிரக அமைப்பின்படி உங்களுக்கு நன்மைகள் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் வேலையில் கவனம் செலுத்தி செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சோம்பலை உடைத்து உடற்பயிற்சி செய்வது அல்லது புதிய விஷயங்களை முயற்சிப்பது நன்மை தரும். இன்று உங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை கவனிப்பது நல்லது. அவர்களின் தவறுக்கு கோபப்படுவதை தவிர்த்து நல்வழிப்படுத்த முயலவும் இன்று உங்களுடைய வணிகம் தொடர்பான நடவடிக்கை மேம்பட தொடங்கும். உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வானிலை மாற்றம் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்பு உண்டு. 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு பணியும் வெற்றிகரமாக முடிக்க முடியும். இது உங்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் காரணமாக எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். உங்களுடைய நிதிநிலை சரியாக பராமரிக்க முயலவும். சிலருடன் தவறான புரிதல்கள் சங்கடத்தை ஏற்படுத்தும். இன்று உங்களுடைய கோபம் மற்றும் ஆணவத்தை விட்டு நிதானமாக செயல்படவும். எந்த ஒரு ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு மிகவும் எச்சரிக்கையாக செயல்படவும். கட்டுமானம் தொடர்பான பணிகளில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவும். 

விருச்சிக ராசி பலன் 

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இன்று ஏதேனும் ஒரு ஆன்மீகப் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். இன்று சில முக்கியமான அரசியல் பிரமுகரை சந்திக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் காரணமாக நேர்மறையான முடிவுகளை காண்பார்கள். குடும்பஸ்தர்கள் தங்கள் வாழ்க்கையில் பதற்றமான சூழலை அனுபவிப்பார்கள். குடும்ப விவகாரம் அல்லது காதல் விஷயத்தில் மூன்றாம் நபரின் தலையீடு நிலைமையை மோசமாக்கும். நிதிநிலை ரீதியாக நல்ல சூழல் இருக்கும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு நிதி திட்டங்களை சரி செய்ய நல்ல நேரம். இங்கு கடின முயற்சிக்கான வெற்றி கிடைக்கும். முதலீடு தொடர்பான திட்டங்களை யாரைவீர்கள். இந்த சமயம் சமூக பணிகளில் தன்னலமின்றி பங்கேற்பீர்கள். இன்றைய எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்கவும். உங்களுடைய ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதை எதிரிகள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்கள் திறமையை பிறர் பாராட்டுவார்கள். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய பணி எதிர்பார்த்த வெற்றி பெறும். 

மகர ராசி பலன் 

மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று முக்கியமான நபர்களின் ஆலோசனை அல்லது ஆதரவு கிடைக்கும். இது உங்கள் செயல்பாட்டை மேம்படுத்தும். சமூக பணிக்காக நேரத்தை செலவிடுவதும், பிறருக்கு நீங்கள் தரக்கூடிய ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்களுடைய சுற்றுச்சூழல் அல்லது நண்பர்கள் சில சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இன்று எந்த ஒரு செயலையும் சொந்த சிந்தனையுடன் செய்வது நல்லது. இல்லை எனில் நிதி இழப்பு அல்லது அவதூறு ஏற்பட வாய்ப்பு உண்டு. வணிகம் தொடர்பான இன்று கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் பணிச்சுமை குறையக்கூடும். 

கும்ப ராசி பலன் 

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதோடு, எடுத்த பணிகளை சரியாக முடிக்க முடியும். இன்று எதிர்மறை எண்ணங்களையும் மனிதர்களையும் தவிர்க்கவும். உங்கள் வீட்டின் பெரியவர்களின் ஆலோசனை நல்ல பலன் தரும். கிரக அமைப்பு சொந்த தொழில் செய்யக்கூடியவர்களுக்கு எதிர் பார்த்த முன்னேற்றத்தை தரும். குடும்ப வாழ்க்கையில் இனிமையை காண்பார்கள். உடல்நல பிரச்சினை உள்ளவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நாள். 

மீன ராசி பலன் 

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு முக்கியமான பணிகள் முடிக்கவும், சில நல்ல தகவல் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு சொத்து சேர வாய்ப்பு உண்டு. நீங்கள் எதிர்பாராத சில தனவரவு உங்களுக்கு கிடைக்கும். இன்று அவசரப்படுவதையும், கோபப்படுவதையும் கட்டுப்படுத்தவும். சில நேரங்களில் அதிகம் நம்பக்கூடிய நபர்கள் ஏமாற்ற வாய்ப்பு உண்டு. மிக நல்ல சுய சிந்தனை உடன் செயல்படவும். பணியிடத்தில் மேலதிகாரிகளிடமிருந்து அனுபவம் வாய்ந்த ஆலோசனை கிடைக்கும். குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்!

சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்!

மட்டு. காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

மட்டு. காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

பொலிஸாருடன் முறுகலில் ஈடுப்பட்ட சிறுவனின் உறவினர்கள்!

பொலிஸாருடன் முறுகலில் ஈடுப்பட்ட சிறுவனின் உறவினர்கள்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

சாமிமலை கவரவில தோட்டத்தில் போராட்டம் தீவிரம்

சாமிமலை கவரவில தோட்டத்தில் போராட்டம் தீவிரம்

ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பு!

'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டம்

'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டம்

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

பாற்சோறு சமைத்து மகிழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள்!

பாற்சோறு சமைத்து மகிழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள்!


ஸ்ஷோட்ஸ்
சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்!

சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்!

அதிகாலையில் பறிபோன உயிர்!

அதிகாலையில் பறிபோன உயிர்!

சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்!

சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்!

நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்!

'ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி' நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு!

'ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி' நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு!

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

ஜனாதிபதிக்கு நன்றி கூறிய பொகவந்தலாவ மக்கள்

ஜனாதிபதிக்கு நன்றி கூறிய பொகவந்தலாவ மக்கள்

அரசு சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்!

அரசு சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்!