Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
MOSTREAD
காணொளி
கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

எல் நினோவை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்!

எல் நினோவை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்!

வனஜீவராசிகள் அதிகாரிகளால் மீட்பு!

வனஜீவராசிகள் அதிகாரிகளால் மீட்பு!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

ரவிகரன் கோரிக்கை!

ரவிகரன் கோரிக்கை!

அரசின் நடவடிக்கை தான் என்ன?

அரசின் நடவடிக்கை தான் என்ன?

    Mobitel Inner 1278

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 2 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலை பெற்றுள்ளது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே இரண்டாம் இடத்திற்கான கடும் போட்டி நிலவுகிறது.

    தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 06 ஆம் திகதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (09) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் த.வெ.க. முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டது. 2 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது.

    5,061 வாக்குகள் பெற்று தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. அதனை தொடர்ந்து, 3,710 வாக்குகள் பெற்று தி.மு.க. இரண்டாம் இடமும், 2,903 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. மூன்றாம் இடமும் வகிக்கின்றன. நாம் தமிழர் கட்சி 39, சிபிம் 19 வாக்குகளும் பெற்றுள்ளன.

    6,189 வாக்குகள் பெற்று தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. அதனை தொடர்ந்து, 4,053 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. இரண்டாம் இடமும், 3,078 வாக்குகள் பெற்று தி.மு.க. மூன்றாம் இடமும் வகிக்கின்றன. நாம் தமிழர் கட்சி 64, சிபிம் 23 வாக்குகளும் பெற்றுள்ளன.

    இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாம் இடத்திற்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.