Oct 13, 2026 - 09:12 AM

இன்று (13) சந்திர பகவான் துலாம் ராசியின் விசாகம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில் மீன ராசியை சேர்ந்த ரேவதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று துலாம் ராசியில் சுக்ரன் ஆட்சி பெற்று மாளவ்ய யோகமும், எவருடன் புதன், சந்திரன் சேர்ந்து திரிகிரகி யோகம் காரணமாக 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம். இன்று நவராத்திரி 2ம் நாள்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் நிலை செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பணம் ஈட்டுவது, முதலீடு செய்யும் விஷயத்தில் பேராசையுடன் செயல்பட வேண்டாம். இது நான் லாபத்திற்கும் பதிலாக இழப்பை சந்திக்க நேரலாம். குழு பணி, கூட்டு முயற்சிகளில் சில பதற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் நிதானத்தை கடைபிடிக்கவும். உடல் நலனை மேம்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நாள். கடினமான சூழ்நிலை, காதல் விஷயத்திலும், துணையின் பிரச்சினைகளை தீர்க்க உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சற்று சாதகமான சூழ்நிலை இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழில் இல்லாமல் காண்பீர்கள். கூட்டு முயற்சிகள் மூலம் நன்மை கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதால் வேலையை வேகமாக முடிக்க முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. காதல் தொடர்பாக நாளின் பிற்பகுதியில், உங்கள் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். நிதி திட்டமிடல் தேவைப்படக்கூடிய நாள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். அதே சமயம் பண விவகாரங்களில் பொறுப்பை உணர்ந்து செயல்படவும். பட்ஜெட் போட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் வெற்றி காண்பீர்கள். வேலை மற்றும் குடும்ப விவகாரங்கள் என எல்லாவற்றிற்கும் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டாம். குடும்ப பிரச்சனைகளில் சுமுகமாக தீர்வு காண்பீர்கள். மாலை நேரத்தில் சென்ற மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய குடும்ப உறவில் அன்பு பெருகும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மங்களகரமான நாளாக அமையும். பயனுள்ள விஷயங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகளை முன்னெடுத்து சென்று வெற்றியடைய முடியும். வெளியூர், வெளிநாடு விவகாரங்களில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கலாம். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பாராட்டு கிடைக்கும். தொழில் விரிவடையக்கூடிய நாள். பணவரவு நிறைந்திருக்கும். இன்று குடும்ப விவகாரத்தில் உணர்ச்சி வசப்படுவதை விடுத்து நிதானமாக செயல்படவும். இன்று உங்கள் வாழ்க்கையில் உணர்வு பூர்வமான நெருக்கத்தை உணர்வீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதிநிலை மற்றும் நிர்வாக திறன் மேம்படக்கூடிய நாள். நீங்கள் செய்யும் சொந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கான மரியாதை கிடைக்கக்கூடும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் சரியாக முடிக்க முடியாமல் சற்று மன உளைச்சல் ஏற்படுத்தலாம். இன்று உங்கள் காதல் அல்லது வாழ்க்கை துணையின் உணர்வுகளை புரிந்து அவர்களுக்கு உதவ வேண்டி இருக்கும். தான தர்மங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று காதல் அல்லது திருமண வாழ்க்கையில் துணையின் சிக்கல்களை தீர்ப்பதில் சிரமங்கள் சந்திக்க நேரிடும். இன்று உங்கள் சிந்தனையில் தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் செய்யும் தொழில் முன்னேற்றம் கிடைக்கும். சிலருக்கு முக்கியமான வணிக ஒப்பந்தம் கிடைக்கப்பெறும். வேலை தொடர்பாக மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இது முடிக்கப்படாத பணிகளை முடிப்பதற்கான உத்வேகத்தை தரும். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதும், சூழலுக்கு ஏற்ற விதத்தில் செயல்படுவதும் அவசியம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். இன்று உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரன் வக்ரநிலையில் இருப்பதால், வரவு செலவு இடையே சமநிலையை பேணவும். இன்று உங்கள் தொழிலில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வீட்டின் கட்டுமானம் அல்லது பராமரிப்பு தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். இன்று சமூக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டினீர்கள். கடினமான நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். ஒரு உறவினர் தொடர்பாக கவலை ஏற்படலாம். காதலியிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சி செய்யவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை பரிசீலிக்கவும். சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான திட்டங்களை பரிசீலிக்கவும். இன்று வாகனம் மற்றும் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் செலவை ஏற்படுத்தும். குடும்ப விஷயங்களில் உங்களுக்கு சாதகமான சூழலில் இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுக்கு பிடித்தமான உணவை உண்டு மகிழ்வீர்கள்.குடும்பத்தில் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம் நடக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகத்தின் மீது நாட்டம் அதிகரிக்கும். உங்களுடைய பணவரவு கூடும் என்பதால் அவற்றை சரியான விதத்தில் சேமிக்க அல்லது முதலீடு செய்ய முயற்சி செய்யவும். தொழிலில் புதிய தொடர்புகள் உங்களுக்கு கிடைக்கும். நாள் என் பிற்பகுதியில் அதிக செலவுகள் நிறைந்ததாக இருக்கும். இன்று பொழுதுபோக்கு அல்லது வேலை தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். குடும்ப வாழ்க்கையில் துணை ஆதரவு மன வலிமையை தரும். குடும்ப பணிகளை பொருத்துடன் நிறைவேற்றுவீர்கள். காதல் துணையுடன் உறவு மேம்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுடைய கடின உழைப்பும், அனுபவமும் உங்களுக்கு உதவும். தடைபட்டு வந்த பணிகளை முடிக்க முயற்சி செய்யவும். தொழில் லாபம் நிறைந்திருக்கும். அதே சமயம் ஆடம்பர செலவுகள் உங்களை துரத்தும். குடும்பத்தினருக்காக போதுமான நேரத்தை ஒதுக்க முடியாத சூழல் ஏற்படலாம். இன்று உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். இதில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பதோடு, உங்கள் துணையுடன் காதலை அதிகரிக்க உதவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை போராடி செய்து முடிப்பீர்கள். திருமணம் தொடர்பான விவகாரங்கள் முன்னேற்றம் அடையும். புதிய தொழில்நுட்பம் உங்கள் பணிக்கு உதவும். சுப நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு பிடித்தமான பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உதவுவார்கள். காதல் உறவு ஆழமடையும். உங்கள் துணை மீது அக்கறையுடன் செயல்படவும். இன்று தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்கவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய அனுபவமும், அறிவும் உங்களுக்கு உதவும். இன்று உங்கள் ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பதோடு கவனமாக இருக்கவும். இன்று உங்களுடைய நடைமுறை சிந்தனை நல்ல பலனை தரும். நிதி விவகாரங்களில் முன்னேற்றம் அடைவீர்கள். தேவையற்ற செலவுகள் சிக்கலை ஏற்படுத்தலாம். இன்று உங்கள் உறவை மேம்படுத்துவதில் தீவிர தன்மையுடன் இருக்கவும். இன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு சிக்கல் ஏற்பட்டலாம். காதல் வாழ்க்கையில் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். நியாயமற்ற விஷயங்களுக்காக அவசர முடிவு எடுக்க வேண்டாம்.






























