Nov 24, 2026 - 10:47 AM

குருவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்களுடன் எலபாத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, எலபாத்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்த 03 மோட்டார் சைக்கிள்கள், 11 மோட்டார் சைக்கிள் செசி பாகங்கள், 05 மோட்டார் சைக்கிள் எஞ்சின் பாகங்கள் மற்றும் 19 இலக்கத் தகடுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 27 வயதுடைய குருவிட்ட மற்றும் உடவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

































