Nov 23, 2026 - 04:01 PM

Tyre House Trading (Pvt) Ltd நிறுவனம், இந்தியாவின் Livguard Technologies (Pvt) Ltd நிறுவனத்துடனான மூலோபாய கூட்டணியின் மூலம், 'LIVFAST' மின்கல வகைகைள இலங்கைச் சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக விழா கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலின் 'ஷங்ரி-லா போல்ரூம்' மண்டபத்தில் பல்வேறு பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது, நாடு முழுவதிலும் உள்ள நுகர்வோருக்கு உயர் செயல்திறன், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நம்பகமான வலுசக்தி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட LIVFAST இன் சந்தையில் உத்தியோகபூர்வ அறிமுகத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் Livguard Technologies நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஷயான் தேவ் முகர்ஜி (Shayan Dev Mukherjee) மற்றும் உதவிப் பொது முகாமையாளர் திருமதி குஷ்பூ சேதி (Khushboo Sethi) ஆகியோர், டயர் ஹவுஸ் குழுமத்தின் பணியியல் பணிப்பாளர் ரொஹான் பீரிஸ், Tyre House Trading நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் புஷ்பகுமார ஆகியோர் இணைந்து இந்த அறிமுக விழாவிற்குத் தலைமை தாங்கினர்.
டயர் ஹவுஸ் குழுமத்தின் தலைவர் லெஸ்லி பொன்சேகா, முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் பொன்சேகா, குழுமப் பணிப்பாளர் கயான் பொன்சேகா, பணிப்பாளர் திருமதி காந்தி தலகல, பணியியல் பணிப்பாளர் ரொஹான் பீரிஸ் ஆகியோர் உள்ளிட்ட டயர் ஹவுஸ் குழுமத்தின் நிர்வாக தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வாகனத் தீர்வுகளின் விநியோகங்ளை விரிவுபடுத்துவதற்கான இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகிறது.
இந்த அறிமுகத்தின் மூலம், Tyre House Trading (Pvt) Ltd நிறுவனமானது, தனது பரந்த நாடளாவிய விநியோகஸ்தர் வலையமைப்பின் மூலம் LIVFAST மின்கலங்களை விநியோகிப்பதன் ஊடாக வாகனத் துறையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
































